முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்; கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம்

 

சென்னை: கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: டிட்வா புயல் காரணமாக தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம். அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான கனமழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள், வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு உடனடியாக மாநில பேரிடர் நிதியில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீரை வடிய வைக்கும் பணிகளை தொடர்ந்து நேரடியாக கண்காணித்து வருகிறேன். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும், மக்களைக் காக்கும்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: