திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஐ.பெரியசாமி எம்எல்ஏவிடம் ஆசிரியர்கள் மனு

திண்டுக்கல், ஜன. 12: திண்டுக்கல்லில் நேற்று திமுக மாநில துணை பொது செயலாளரும், எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமியை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அன்பரசு, செயலாளர் மோகன்குமார், பொருளாளர் சந்திரா, எஸ்டிஎப்ஐ பொதுக்குழு உறுப்பினர் மோசஸ் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அதில், ‘தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறோம். 2003ம் ஆண்டிற்கு பின் பணி நியமனம் செய்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஓய்வு அல்லது மறைவுக்கு பின் எவ்வித பண பலன்கள் கிடைக்காமல் கூலி வேலைக்கு செல்லுதல் உட்பட பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே அடுத்து அமையவிருக்கும் திமுக ஆட்சியில் புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.மனுவை பெற்று கொண்ட எம்எல்ஏ ஐ.பெரியசாமி, ‘திமுக ஆட்சி வந்த பின் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். உடன் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Related Stories: