ஆலந்தூர்,நவ.27 : புழுதிவாக்கத்தில் உள்ள தந்தை பெரியார் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ்2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு புழுதிவாக்கம் 186வது வார்டு கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன் தலைமை வகித்தார். பெருங்குடி 14வது மண்டலக்குழு தலைவர் எஸ். வி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு 50 மாணவிகள், 31 மாணவர்கள் என 81 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் கமலநாதன், யோகராஜன், ரகு, ஜவகர் தினேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
81 மாணவர்களுக்கு விலையில்லா மதிவண்டிகள்: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வழங்கினார்
- அரவிந்த் ரமேஷ்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஆலந்தூர்
- தமிழ்நாடு அரசு
- தத்தி பெரியார் மேல்நிலைப் பள்ளி
- பருத்திவாக்கம்
- 186வது வார்டு
- கவுன்சிலர்
- ஜே.கே. மணிகண்டன்…
