போதைப்பொருள் கடத்தல் பணமோசடி டெல்லி, ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறை சோதனை

புதுடெல்லி: டெல்லியில் கடந்த ஆண்டு ஜானக்புரி மற்றும் நங்லோய் பகுதிகளில் இருந்து ரூ.900கோடி மதிப்புள்ள 82.53 கிலோ கோகைனை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஹவாலா ஆபரேட்டர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது தேசிய புலனாய்வு இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட இருந்தது.

இந்த கடத்தல் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி என்சிஆர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கின.

Related Stories: