6 திருக்கோயில்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைச்செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த 6 திருக்கோயில்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்புகளில் 16 அர்ச்சகர்கள் மற்றும் 31 பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்தந்த கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொடர்ந்து குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி 6 திருக்கோயில்களில் கட்டப்பட்டுள்ள 16 அர்ச்சகர்கள் மற்றும் 31 பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: