விளையாடும் போது கருவிழி கிழிந்தவருக்கு மீண்டும் பார்வை: அகர்வால் கண் மருத்துவமனையின் அளப்பரிய சாதனை

சென்னை: விளையாடும் போது கருவிழி பாதித்து பார்வை இழந்த தாம்பரம் முன்னாள் சேர்மன் மணி ஏகாம்பரத்திற்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பார்வை கொடுத்துள்ளனர். தாம்பரம் முன்னாள் சேர்மன் மணி ஏகாம்பரம் இறகுப்பந்து விளையாடி கொண்டிருந்தபோது வலது கண்ணில் காயம் ஏற்பட்டு கருவிழி கிழிந்து பார்வை பறிபோகும் நிலைக்கு ஆளானார். அதை தொடர்ந்து அகர்வால் கண் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பார்வை கிடைக்க 10%சதவீதம் வாய்ப்புள்ளதால் கருவிழி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

ஆனால் கருவிழி உடனே கிடைக்காது. பதிவு செய்து காத்திருக்க வேண்டும். இந்த நிலையில், அகர்வால் கண் மருத்துவமனை இயக்குனரும், மூத்த கண் மருத்துவருமான அமர் அகர்வால் பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி எனப்படும் நவீன அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மீண்டும் பார்வை கிடைக்க செய்தார். பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி அறுவை சிகிச்சையால் மறுத்தினமே கண்பார்வை கிடைத்தது. மறுவாழ்வு கிடைத்தது போல் மகிழ்ச்சி அளிப்பதாக மணி ஏகாம்பரம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள கோடிக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அத்தனை பேருக்கும் கண்தானம் பெறுவது மிக கடினமான ஒன்று அதற்கு மாற்றாக பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி மூலம் மீண்டும் பார்வை கிடைப்பது வர பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

Related Stories: