ரயிலில் இளம்பெண்ணை வெளியே தள்ளியவர் கைது..!!

கேரளா: கேரளா வர்க்கலாவில் ஓடும் ரயிலில் சோனா என்பவரை எட்டி உதைத்து வெளியே தள்ளிய போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். தண்டவாளத்தில் கிடந்த சோனா மீட்கப்பட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனா கழிவறை சென்றபோது, போதையில் இருந்த சுரேஷ்குமார் வாக்குவாதம் செய்து எட்டி உதைத்ததாக தகவல் தெரிவித்தார்.

Related Stories: