ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. கலைஞர் பல்கலை. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் ஜனாதிபதிக்கு அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தர உத்தரவிடக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்த உத்தரவுக்கு எதிராக ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். ஜனாதிபதி 13 கேள்விக்கு விளக்கம் கேட்டுள்ள விவகாரத்தில் முடிவு தெரிந்த பிறகு தமிழ்நாடு அரசின் மனு விசாரிக்கப்படும். 13 கேள்விகள் தொடர்பான விவகாரத்தில் நவ.21க்குள் தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: