பெசோ, நீரி அமைப்பால் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மற்றும் என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “காற்று மாசு அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒன்றிய அரசின் பெசோ மற்றும் நீரி அமைப்பால் சான்றளிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளின் சான்றிதழை பெற்ற உற்பத்தியாளர்களை நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் எந்த விற்பனையும் செய்ய மாட்டோம் என்று அவர்கள் உறுதி அளிக்க வேண்டும். குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள், பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம். ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் இந்த பட்டாசுகளை அவர்கள் விற்பனை செய்யக் கூடாது. அதற்கான தடை என்பது தொடரும் ” என்று நீதிபதிகள் கூறினர்.

Related Stories: