புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணியில் டிமிக்கி கொடுக்கும் போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை,டிச.24: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோத்து பணியில் டிமிக்கி காட்டும் போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, கிராமங்களில் இரவு நேர ரோந்து பணிகளை போலீசார் அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 35க்கும் மேற்பட்ட சட்டம் ஒழுங்கு காவல்நிலையங்கள் உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட காவல்நிலையத்திற்கு கீழ் பல்வேறு கிராமங்கள் வருகிறது. இந்நிலையில் கொரோனா காலம் என்பதால் கிராமங்களில் தற்போது பல்வேறு இடங்களில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் அதிகமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு முடிந்த பிறகு மக்கள் கோவில், சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். இதனை பயன்படுத்தி கிராமங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் அவ்வப்போது அடி தடி பிரச்னைகளும் எழுந்து அடங்கிவிடுகிறது.

இதனை முற்றிலும் குறைக்க போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும், திருட்டு சம்பவங்கள் மற்றும் அடி தடி பிரசனைகளை குறைக்க ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளில் இரவு நேர ரோந்தது பணிக்கும் செல்லும் போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் முறையாக ரோந்து பணி செய்வதில்லை. தங்களுக்கு கொடுக்கப்பட்ட மைக்கை ஒரு இடத்தில் வைத்துகொண்டு உயர் அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் கேட்கும்போது வெவ்வேற இடத்தில் இருப்பதுபோல் தகவல் தெரிவித்து ஒப்பேத்துகின்றனர். இதபோல் இரவு நேர ரோந்து பணிக்கு செல்லும் உயர் அதிகாரிலும் இந்த பணியை மேற்கொள்கின்றனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து ரோந்து பணிகளை அதிகரிக்கும்போது எப்பொழுது போலீசார் வருவார்கள் தெரியாமல் திருடர்கள் அச்சத்துடன் வெளியேறுவார்கள். இதனால் திருட்டு முற்றிலும் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்லகம், கீரமங்கலம், கீரனூர், மண்டையூர், மாத்தூர், இலுப்பூர், கீரனூர் உள்ளிட்ட அனைத்து காவல்நிலையங்களிலும் இரவு நேரத்தில் ரோந்து செய்யும் போலீசார் நகர்பகுதி, தேசிய நெடுஞ்சலை பகுதியோடு தங்கள் பணியை முடித்து விடுகின்றனர். இவர்கள் கிராம பகுதிகளுக்கு செல்வதில்லை. இதனால் தான் நகர் பகுதியில் மட்டுமே வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபடும் திருடர்கள் தற்போது தங்கள் கைவரிசையை கிராமங்களுக்கும் விரிவு செய்துள்ளனர். எனவே இதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: