ஐதராபாத்: தெலங்கானா அரசு இன்ஜினியர் வீடு, உறவினர்களுடன் தொடர்புடைய 10 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.2.18 கோடி ரெக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தெலுங்கானா மாநில மின் விநியோக நிறுவனத்தின் உதவி பிரிவு பொறியாளர் அம்பேத்கர் எருகு. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் தெலங்கானா லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் எருகு மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 10 இடங்களில் நேற்று சேதனை நடத்தினர்.
இதில் பண மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை ரூ.2.18 கோடி ரொக்கம் மற்றும் ஒரு பிளாட், ஒரு ஆறு மாடி கட்டிடம், 10 ஏக்கர் நிலத்தில் அம்தர் கெமிக்கல்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனம், ஐதராபாத்தில் ஆறு பிரதான குடியிருப்பு நிலங்கள், ஒரு விவசாய நிலம், இரண்டு நான்கு சக்கர வாகனங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கி வைப்புத்தொகைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் ஏசிபி வங்கி வைப்புத்தொகையாக ரூ.75 லட்சத்தையும், டிமேட் கணக்குகளில் ரூ.36 லட்சத்தையும் அதிகாரிகள் மீட்டனர்.
