ஜம்மு எல்லையில் ஆயுதக் கடத்தல் முறியடிப்பு

ஐம்மு: ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் ஆயுத கடத்தலை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ் புரா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் மர்மநபர்கள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள், ஆர்னியாவில் இருந்து வந்த காவல்துறையினர் கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மர்மநபர்கள் துப்பாக்கியை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். ஏகே ரக துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலமாக ஆயுத கடத்தல் முறியடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related Stories: