சாத்தான்குளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

 

சாத்தான்குளம், செப். 15: சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவராஜேஸ் தலைமையில் குற்றவியல் நடுவர் நீதிபதி தேவி ரக்க்ஷா முன்னிலையில் நடந்தது. இதில் அமர்வு வழக்கறிஞராக ஜெர்லின் கலந்து கொண்டார் முகாமில் சிறுகுறு வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு ரூ. 7.32 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. நிகழ்வில் வழக்கறிஞர்கள் இளங்கோ அந்தோனி ரமேஷ் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சுரேஷ், வழக்கறிஞர்கள் முருகானந்தம், மணிமாறன், வேணுகோபால், அருண்குமார் மணிகண்டன், சுடலை, மாரிமுத்து, ஏசுதாசன், பிரின்ஸ், ஷீபா ஐரின், லத்தீஷ்,ஷில்பா, ஜெயரஞ்சனி மற்றும்
நீதிமன்ற பணியாளர்கள், சட்ட பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: