ஓய்வூதியர் தின விழா

சிவகங்கை, டிச.20: சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது. வட்டத்தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டச்செயலாளர் முத்து வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மகாலிங்கம், மாநில செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் மாநில செயலாளர் ராபர்ட், எஸ்பிஐ வங்கி மேலாளர் முத்து, கருவூல அலுவலர் ரெத்தினசாமி பேசினர்.

விழாவில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சிவகங்கை வட்ட நிர்வாகிகள் கோபிநாத், பாண்டி, சரோஜினி, மாவட்ட நிர்வாகிகள் வீரபாண்டியன், முகமதுரபீக், சேது, வாழவந்தான், ஹக்கீம், திரவியம், சங்கரசுப்பிரமணியன், முத்துமாடன், அன்புநாதன், அமல்ராஜ், சந்திரன், முகமது அப்துல்ரஹீம் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். மாரியப்பன் நன்றி கூறினார்.

Related Stories: