தேனி, டிச. 20: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.போடி அருகே உள்ள தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவர், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், தேவாரம் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து செல்வராஜை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரக்ஷிதா ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். அதில், வாலிபர் செல்வராஜ் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி ெசய்யப்பட்டு இருப்பதால், அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம், இதை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
