ஒன்றிய அரசை கண்டித்து 5ம் தேதி ரயில் மறியல் போராட்டம்: இளைஞர் பெருமன்றம் அறிவிப்பு

சிவகாசி, டிச.20: சிவகாசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஏஐஒய்எப் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. ராமசுப்பு தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ இராமசாமி, முன்னாள் எம்பி லிங்கம், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினர். ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் பகத்சிங், நிர்வாகிகள் வத்ராப் தினேஷ்குமார், திருச்சுழி அருண்சிங்சரத், அருப்புக்கோட்டை தோப்புச்சாமி, விருதுநகர் மாரியப்பன், சிவகாசி சாமுவேல், சுருளி உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கலைவாசகன், சுரேஷ் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் வக்கீல் பகத்சிங் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

கூட்டத்தில், ஒன்றிய மோடி அரசால் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசின் ரயில்வே, இன்சூரன்ஸ், வங்கி உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவழங்க வேண்டும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வேலையின்மைக்கு எதிரான ரயில் மறியல் போராட்டம் வருகிற ஜனவரி 5ம் தேதி ராஜபாளையத்தில் நடைபெற இருக்கிறது. ஒன்றிய மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தின் பெயரில் சமஸ்கிருதத்தை திணித்து பூஜ்ய பாபு ரோஜ்கர் யோஜனா திட்டம் என்று காந்தி பெயரை அகற்றி, நிதியை மடைமாற்றம் செய்யும் மோசடி தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து காந்தியின் பெயரால் திட்டம் தடையின்றி முழுமை செயல்பட வேண்டும். 100 நாள் வேலையை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்தி அனைவருக்கும் நிபந்தனையின்றி வேலை வழங்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்பட்டன.

Related Stories: