குமுளி சோதனை சாவடியில் காய்கறிகளுடன் புகையிலை பொருள் கடத்தியவர் கைது

கூடலூர், டிச. 20: கேரள மாநிலம் குமுளியில் உள்ள கலால் துறை சோதனைச் சாவடியில் குமுளி காவல் ஆய்வாளர் அபிலாஷ் குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழகத்திலிருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 31 சாக்குப் பைகளில் அடுக்கி வைக்கப்பட்டு, அவற்றின் மேற்பகுதியில் காய்கறி மூட்டைகளை வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வேனில் இருந்த இடுக்கி மாவட்டம் காமாட்சிபாறைக்கடவு பகுதியைச் சேர்ந்த பீனிஸ்தேவ் (38) என்பவர் மீது வழக்குபதிவு ெசய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து, பீனிஸ்தேவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: