பைக் திருடிய வாலிபர் கைது

ஈரோடு, டிச. 20: ஈரோடு லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (45).டாஸ்மாக் சேல்ஸ்மேன். கதிர்வேல், கடந்த வாரம் அவரது பைக்கினை, அவர் வேலைபார்க்கும் கடைக்கு அருகே நிறுத்திவிட்டு பணியாற்றி வந்தார்.வேலைமுடிந்து வந்து பார்த்தபோது, கதிர்வேலின் பைக்கை காணவில்லை. இந்நிலையில், கதிர்வேல் அவரது நண்பருடன் சோலார் பஸ் ஸ்டாப்பில் நேற்று முன்தினம் நின்றிருந்தபோது, அங்கு ஒருவர் கதிர்வேலின் பைக்கை ஓட்டிவந்து, ஒரு கடைக்கு முன் நிறுத்தினார். இதைப்பார்த்த கதிர்வேல் உடனடியாக அந்த நபரை நண்பர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து, ஈரோடு தெற்கு போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்த பழ வியாபாரியான பிரகாஷ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கதிர்வேலின் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories: