தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 292 வழக்குகளுக்கு தீர்வு

காங்கயம், செப். 14: காங்கயம் வட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எஸ்.சந்தானகிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். முதல் அமர்வில் காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சந்தானகிருஷ்ணசாமி மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எஸ்.மாலதி ஆகியோரும். ஓய்வுபெற்ற நீதிபதி குப்புசாமி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் டி.தேன்மொழி ஆகியோர் இரண்டாவது அமர்விலும் பங்கேற்றனர். இம்மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து வழக்குகள், மோட்டார் வாகன சிறு வழக்குகள் என மொத்தம் 397 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 292 வழக்குகளுக்கு சமரசம் காணப்பட்டது ரூ.3 கோடியே 72 லட்சம் மதிப்புக்கு சமரசத்தீர்வு காணப்பட்டது.

Related Stories: