குப்பை பிரச்னை வீடுகளில் கருப்பு கொடி போராட்டம்

திருப்பூர், டிச.15: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் பயன்படுத்தப்படாத பாறைகுழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அந்தந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இடங்கள் தேர்வு செய்து கொட்டப்பட்டு வருகிறது. மேலும் நுண் உரமாக்கும் மையங்களில் உடனுக்குடன் குப்பைகள் தரம் பிரித்து உரமாகவும், பிளாஸ்டிக் குப்பைகள் தனியாகவும் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காயிதே மில்லத் நகர் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம் இருப்பதோடு, குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பதால் ஏற்படும் புகை மூட்டம் அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்தும், தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 

Related Stories: