நல்லாறு கால்வாயில் தடுப்பு சுவர் கட்டப்படுவது எப்போது?

உடுமலை, டிச. 13: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின்போது நல்லாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனால் இங்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் நிரம்பி தடுப்பணை நிரம்பி வழியும் நிலை ஏற்படும்போது, ஷட்டர் திறக்கப்பட்டு நல்லாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். இந்த கால்வாய் சாலையோரம் அமைந்துள்ளது. தடுப்புசுவர் இல்லாததால் வாகனங்கள் கால்வாய்க்குள் விழும் ஆபத்து உள்ளது. கால்வாயில் எப்போதும் தண்ணீர் அதிகளவில் செல்லும். எனவே, தடுப்புசுவர் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: