ஈரோடு, டிச. 15: ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலையில் உள்ளது இ-சேவை மையம். இந்த மையம் கடந்த 10, 11ம் தேதிகளில் திறக்கப்படவில்லை. அதன் உரிமையாளர், 12ம் மையத்தை திறக்க வந்தபோது, அதன் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த லேப்டாப் ஒன்று திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, கடை உரிமையாளர், ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வந்தனர். அதில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் ஆய்வில், சேலம் மாவட்டம், ஆண்டிபட்டி, பனங்காடு சாலைமரத்து வட்டம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அய்யனார் (எ) நண்டு (19), என்பவர் லேப்டாப்பை திருடி சென்றது தெரியவ வந்தது.
மேலும் விசாரணையில், அவர் தற்போது, ஈரோடு சூரம்பட்டி வலசு, நேதாஜி வீதியில் வசித்து வருவதும், கட்டிடத்தொழில் மற்றும் ராட்டினம் சுற்றும் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
