நத்தம் அரசு கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

நத்தம், செப். 13: நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தினத்தையொட்டி பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜாராம் முன்னிலை வகித்தார். செந்துறை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மைய ஆலோசகர் மீனா கலந்து கொண்டு பால்வினை நோய், காசநோய் மற்றும் மனநலம் குறித்து விழ்ப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

இதற்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அமுதா செய்திருந்தார். தமிழ் துறை தலைவர் தண்டபாணி நன்றி கூறினார். இதில் கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்- பேராசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: