பாவூர்சத்திரம்,செப்.13: ‘கேலோ இந்தியா மாநில சாம்பியன்ஷிப் 2025’ போட்டியில் பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கோவை சின்ன வேடம்பட்டியில் உள்ள டிகேஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வைத்து ‘கேலோ இந்தியா மாநில சாம்பியன்ஷிப் 2025‘ போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பாவூர்சத்திரம் செயிண்ட் அசிசி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி தனசா மிரக்கிள் கலந்து கொண்டு வுஷு பிரிவில் தனது செயல்திறனைக் காட்டி வெண்கல பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் அந்தோனி சேவியர், முதல்வர் தேன்கனி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.
கேலோ இந்தியா மாநில சாம்பியன்ஷிப் போட்டி செயிண்ட் அசிசி பள்ளி மாணவி சாதனை
- கேலோ இந்தியா மாநில சாம்பியன்ஷிப்
- செயிண்ட் அசிசி பள்ளி
- பவுர்சத்ரம்
- செயிண்ட் அசிசி மெட்ரிகுலேஷன் பள்ளி
- கேலோ இந்தியா ஸ்டேட் சாம்பியன்ஷிப் 2025
- டி.கே.எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
- சின்ன வேடம்பட்டி, கோயம்புத்தூர்
