350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர்,டிச.19: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் 2025-26ஆம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருது பெற ஆர்வமும், தகுதியும் உடையவர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தேசிய பெண்குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட, 13 வயதிற்கு மேல், 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்தவராக இருத்தல் வேண்டும்.பிற பெண்குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், போன்ற ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காணுதல் போன்ற தலைப்புகளில் ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதுபோன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் உள்ளிட செயல்களில் ஈடுபட்டதற்கான உரிய சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் () உரிய விபரங்களுடன் நவம்பர் 29ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. தற்போது கால அவகாசம் வருகிற 20ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகம், தொலைபேசி எண் : 04328-296209 என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: