கணினி இயக்குபவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர்,டிச. 19: திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர்கள் தற்காலிக பணியிடத்திற்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் கலெக்டர் தலைமையில், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள 2 கணினி இயக்குபவர்கள் பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக மாதம் ரூ.20 ஆயிரம் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதிவாய்ந்த மகளிர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதவிகளுக்கான மாதிரி விண்ணப்பம் திருவாரூர் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைத்தளம், திருவாரூர் 610004 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அடுத்த மாதம் (ஜனவரி) 5ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: