திருவாரூரில் ஒன்றிய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,டிச.19: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பினை 74 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக உயர்த்தும் ஒன்றிய அரசின் சட்ட மசோதாவை கண்டித்தும், இந்த சட்ட மசோதா காரணமாக காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீடு என்பது இந்திய மக்களின் சேமிப்பை சூறையாட அனுமதிக்கும் விளைவினை ஏற்படுத்தும் என்பதால் இதனை கைவிட கோரியும் திருவாரூரில் நேற்று எல்ஐசி கிளை அலுவலகம் முன்பாக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை கோட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தலைவர் காளிமுத்து மற்றும் ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்க தலைவர் அழகிரி மற்றும் திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் அழகிரி, பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்க தலைவர் குணா மற்றும் யூனியன் வங்கி பொறுப்பாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பணிகளை தொய்வின்றி செம்மையாக செய்து வருகிறார்.

Related Stories: