பியூட்டி பார்லரில் தகராறு பியூட்டிஷியன் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து

திருச்சி, டிச.18: திருச்சி பாலக்கரை பீமநகர் ராஜா காலனியை சேர்ந்த சலீம் மகள் சலீமா(32). இவரது நண்பர் லட்சுமணன். இருவரும் இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன் உறையூரில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தனர். இதில் இருவருக்கிடையே விரிசல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சலீமா, தென்னூர் அரசமரத்தடியில் புதிதாக பியூட்டி பார்லரை நேற்று முன்தினம் திறந்தார். இது குறித்து அறிந்த லட்சுமணன், சம்பவயிடம் வந்து சலீமாவிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த ஜீயபுரத்தை சேர்ந்த புவனா(32), திருவெறும்பூர் ரஞ்சித்(41) மற்றும் பீமநகரை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகியோர் சலீமாவிற்கு ஆதரவாக பேசினர். இதனால் தகராறு முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சலீமா உள்பட 4 பேரையும் சரமாரியமாக குத்திவிட்டு லட்சுமணன் தப்பினார். காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: