ஜெயலலிதாவை விட திறமைசாலி நான் ஸ்ரீரங்கத்தில் எடப்பாடி தம்பட்டம்: அதிமுகவினர் அதிருப்தி

திருச்சி: மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு திருச்சி ரங்கம் ராஜகோபுரம் அருகே நடந்த பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சியை கட்டிக்காத்த ஜெயலலிதா தொகுதி இது. இங்கு போட்டியிட்டு ஜெயலலிதா முதல்வரானார். அவர் முதல்வராக இருந்தபோது, ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் பெறாமல் மருத்துவ கல்லூரி கொண்டு வந்தார். நான் முதல்வராக இருந்தபோது பிரதமரிடம் பேசி நிதியுதவி பெற்று மருத்துவக் கல்லூரி கட்டினேன். அதுதான் திறமை என பெருமை பொங்க கூறினார். ஜெயலலிதாவால் ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வாங்க முடியவில்லை. நான் வாங்கினேன் என்று எடப்பாடி தம்பட்டம் அடித்துக் கொண்டது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆம்புலன்ஸ் டிரைவர் புகார்
நேற்று முன்தினம் இரவு துறையூர் பேருந்து நிலையம் அருகில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மயக்கம் அடைந்ததாக கிடைத்த தகவலின் பேரில் அவரை ஏற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ் சென்றபோது, அதை மறித்து அதிமுகவினர் தாக்கினர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செந்தில், உதவியாளர் ஹேமலதா (8மாத கர்ப்பிணி) ஆகியோரையும் அதிமுகவினர் தாக்கினர். இதுபற்றி ஆம்புலன்ஸ் டிரைவர் நேற்று அளித்த புகாரின் பேரில் துறையூர் நகர்மன்ற கவுன்சிலரும், அதிமுக நகர செயலாளருமான அமைதி பாலு (எ) பால முருகவேல், நகர்மன்ற கவுன்சிலர் தீனதயாளன், துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் காமராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் விவேக் உட்பட 14 மீது 7 பிரிவுகளில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: