எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச நடிகர் விஜய்க்கு உரிமை கிடையாது: மாஜி அமைச்சர் வேலுமணி ஆவேசம்

திருமங்கலம்: திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில் நடைபெற்ற அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, ‘இந்த மதுரை மண்ணில் பேசிய நடிகர் விஜய் அதிமுக தலைமை யாரிடம் உள்ளது என பேசியுள்ளார். அதிமுகவிற்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவருக்கு தெரியவில்லை.சாதாரண கிளை செயலாளராக இருந்து கட்சி பொதுசெயலாளர் ஆகியுள்ளார். நாங்கள் பொதுக்குழு உறுப்பினர் அனைவரும் சேர்ந்து அவரை தலைவராக தேர்வு செய்தோம். இன்று அவர் தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. கூட்டத்தினை கண்டவுடன் விஜய் பேசியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை பற்றி பேச நடிகர் விஜய்க்கு எந்த உரிமையும் கிடையாது,’ என்றார்.

Related Stories: