செங்கல்பட்டு, ஆக.19: விஷ்ணு ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். அந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் தெற்குப்பட்டு பகுதியில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபாலசுவாமி திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக, ராதா ருக்மணி சமேத வேணுகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் இரவு 10 மணியளவில் கிருஷ்ணருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியம், கிருஷ்ண பஜனை முழங்க வாணவேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தி விழா
- கிருஷ்ண ஜெயந்தி திருவிழா
- செங்கல்பட்டு
- விஷ்ணு
- திதி
- அவனி
- கிருஷ்ண ஜெயந்தி
- ராதா ருக்மணி சமேதா
- அஞ்சூர்
- செங்கல்பட்டு மாவட்டம்
