காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் தெப்போற்சவம்

காஞ்சிபுரம், ஜன.30: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தைப் பூசத்தையொட்டி 3 நாட்கள் நடைபெறும் தெப்போற்சவம் நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தைப் பூசத்தை முன்னிட்டு, 3 நாட்கள் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தெப்போற்சவம் நேற்று ெதாடங்கியது. இதில், இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஏலவார்குழலி அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் ஏகாம்பரநாதர், தெப்ப குளத்தில் 3 முறை உலா வந்து காட்சியளித்தார். இரண்டாம் நாளான இன்று 5 முறையும், தெப்போற்சவம் நிறைவு நாளான நாளை 7 முறையும் உலா வருகிறார். ேநற்று ஏகாம்பரநாதர் கோயில் ஏலவார்குழலி அம்மன் ஹாய் யுவர் தப்ப உற்சவத்தில் வீதிஉலா வர, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related Stories: