கிருஷ்ணகிரி, ஆக.15: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் கடந்த 12ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்தூரை அடுத்த மயிலம்பட்டியை சேர்ந்த 35க்கும் மேற்பட்டவர்கள் சரக்கு வாகனத்தில் ஊருக்கு திரும்பினர். மத்தூர் அடுத்த அத்திகானூர் அருகே சென்றபோது எதிரில் வந்த வாகனம் மோதியது. இதில் 35க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்த அவர், நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதியழகன் எம்எல்ஏ நிதியுதவி
- மதியழகன்
- சட்டமன்ற உறுப்பினர்
- கிருஷ்ணகிரி
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர்
- மயிலம்பட்டி
- மாத்தூர்
