வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஆக.14: தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தனஞ்செயன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அற்புதராஜ்ரூஸ்வெல்ட் பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய காலத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை கைவிட்டு வாரத்திற்கு இரண்டு முகாம்கள் நடத்த வேண்டும். இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ள கூடுதல் தன்னார்வலர்கள் மற்றும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிறப்பு திட்டப் பணிகள் மேற்கொள்ள அனைத்து வட்டங்களிலும் புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

Related Stories: