திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவதற்கு நான் குரல் கொடுப்பேன். மதிமுக தோள் கொடுத்து நிற்கும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கும் போதிய விலை வழங்கவில்லை. விவசாயிகளை ஒன்றிய மோடி அரசு வஞ்சிக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுகின்றனர். இதனை தடுக்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு துணை நிற்போம். இவ்வாறு பேசினார்.
