6 பள்ளிகளில் நீர் தேங்கியுள்ளது; தனி கவனம் செலுத்தி உடனே நீரை அகற்ற அறிவுறுத்தி உள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

புதுக்கோட்டை: 6 பள்ளிகளில் நீர் தேங்கியுள்ளது; தனி கவனம் செலுத்தி உடனே நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலின் காரணமாக நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்தது. அதனால் கடந்த ஒரு வாரமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மழையின் அளவு குறைய தொடங்கியதால் மழை நீர் தேங்கிய பகுதிகளில்மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இன்று நான்கு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சென்னையில் 6 பள்ளிகளில் பணிகள் நிறைவடையாததால் இன்று திறக்கப்படவில்லை. இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி; 6 பள்ளிகளில் நீர் தேங்கியுள்ளது; தனி கவனம் செலுத்தி உடனே நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், 4 மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4,435 பள்ளிகளில் 32 பள்ளிகளில் பணி செய்ய வேண்டி உள்ளது என்றும், 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கட்டடங்கள் உறுதி தன்மையுடன் இருக்கின்றனவா என்பதை அறிய 20 வகை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post 6 பள்ளிகளில் நீர் தேங்கியுள்ளது; தனி கவனம் செலுத்தி உடனே நீரை அகற்ற அறிவுறுத்தி உள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: