6 மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெப்பம்: 10 மாவட்டங்களில் சதமடித்தது வெயில்

சென்னை:  தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நேற்று வெப்பம் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. சராசரியாக 10 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் இருந்தது. தமிழ்நாட்டில் தற்போது படிப்படியாக வெயில் அதிகரித்து வருகிறது. மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில் தற்போது வெயில் அதிகரித்து வெப்ப சலனம் ஏற்பட்டு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சூழ்நிலையும் இருந்து வருகிறது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர்,திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், மற்றும் ராணிப் பேட்டை மாவட்டங்களில் நேற்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை 6மணி அளவில் நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்தது. இதற்கிடையே, ஈரோடு, சேலம், பகுதியில் நேற்று இயல்பைவிட கூடுதலாக 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடியதால் 102 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் நிலவியது.

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி, கரூர்,மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களிலும் இயல்பைவிட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. பிற மாவட்டங்களை பொருத்தவரையில் 10 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் நிலவியது. இதையடுத்து இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இயல்பைவிட கூடுதலாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும்.

The post 6 மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக வெப்பம்: 10 மாவட்டங்களில் சதமடித்தது வெயில் appeared first on Dinakaran.

Related Stories: