சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அக்.20, 21, 22-ல் சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,265 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
The post ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.