திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய எல்லையில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

திருவண்ணாமலை,பிப்.25: திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வேங்கிக்கால் பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் நகரின் சில பகுதிகளும், வேங்கிக்கால் ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அடங்கியுள்ளது. கிராம ஊராட்சிகளை அதிகம் கொண்டுள்ள இந்த காவல் நிலைய எல்லையில், கடந்த சில தினங்களாக தாலுகா காவல் நிலையம் அருகே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 21ம் தேதி இடுக்குபிள்ளையார் கோயில் தெரு பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். நேற்று முன்தினம் இரவு வேங்கிக்கால் எழில் நகர் பகுதியில் திருட்டு நடந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய எல்லையில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால் பெரும் பீதியடைந்துள்ளோம். இரவு நேரங்களில் தாலுகா போலீசார் ரோந்து வரவேண்டும். ரோந்து பணிகள் இல்லாததால் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதற்கு காரணம். எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியினை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Related Stories: