கலைஞர்கள் மாமன்றம் வலியுறுத்தல்

காரைக்கால் பிப்.14:  காரைக்கால் கலைஞர்கள் மாமன்ற துணைத் தலைவர் கவிஞர் தங்கவேலு புதுச்சேரி முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: இறைவனின் (பரமசிவன்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் கோவில் காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ளது.உலகபுகழ் வாய்ந்த அம்மையாரை, தமிழ் இசைக் கலைஞர்கள் நினைவு கூறும் வகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக, காரைக்கால் அம்மையார் ஐக்கிய தமிழ் இசை ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவை தொடர்ந்து நடத்துவதற்கு கைலாசநாதர் தேவஸ்தானத்திற்கு நிதி பற்றாக்குறை இருப்பதால், இவ்விழா நடைப்பெறுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு இதேகோரிக்கையை தங்கள் (முதல்வர்) முன் வைத்தபோது, அரசு விழாவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தாங்கள் உறுதி அளித்ததோடு, காரைக்காலில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில், நடப்பு ஆண்டு அம்மையார் ஐக்கிய தமிழ் இசை ஆராதனை விழா, அரசு விழாவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தீர்கள். அப்போது கால அவசகாசம் இல்லாத காரணத்தால், கோவில் நிர்வாகமே விழாவை சிறப்பாக நடத்தியது. எனவே, இந்த ஆண்டு  காரைக்கால் அம்மையார் ஐக்கிய தமிழ் இசை ஆராதனை விழாவை, தாங்கள் உறுதி அலீத்தது போல் அரசு விழாவாக நடத்த நடவடிக்கை எடுத்து அம்மையாருக்கு புகழ் சேர்க்கவேண்டுகிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: