உலக கை கழுவும் தினம்

திருப்புத்தூர், அக். 17:  திருப்புத்தூர் நேஷனல் அகாடாமி சமுதாய கல்லூரியில் பொது சுகாதார துறை சார்பில்  உலக மக்கள் தினம், டெங்கு விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது.

மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ரமேஷ் தலைமை தாங்க, சுகாதார ஆய்வாளர் சகாயஜெரால்டு முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுரேஷ்பிரபாகர் வரவேற்றார். விழாவில் டெங்கு போன்ற நோய்களிலிலுருந்து நம்மை காத்து கொள்வது குறித்தும், நோய் ஏற்பட்டால் அவற்றிலிருந்து விடுபடுதல் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதாரம் பேணும் வகையில் கை கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டு, கை கழுவுதல் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரம் குறித்து பல்வேறு போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் சேக்அப்துல்லா நன்றி கூறினார்.

Related Stories: