சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் முல்லைக்குத் தேர் கொடுக்கும் பாரிவிழா

சிங்கம்புணரி, ஏப். 20: சிங்கம்புணரி அருகே கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்ட பரம்பு மலை என்னும் பிரான்மலை உள்ளது. பாரி மன்னன் ஆண்டதாக கூறப்படும் பிரான்மலையில் குன்றக்குடி ஆதீனத்திற்கு உட்பட்ட மங்கை பாகர் தேனம்மை கோயில் சித்திரை திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றுத்துடன் காப்பு கட்டி தொடங்கியது. 10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இத்திருவிழாவில் 7ம் திருவிழாவான முல்லைக்கு தேர் கொடுக்கும் பாரிவிழா நடைபெற்றது. இதில் வேட்டைக்கு சென்று திரும்பும் பாரி மன்னன் தேரில் முல்லைக்கொடி படர்வது போல் விழா நடைபெற்றது.

இதில் பாரி அமர்ந்து வரும் சப்பரத்தில் முல்லைக்கொடியை குன்றக்குடி அடிகளார் தலைமையில் கொடி படரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 5 கிராம மக்களுக்கு படி அரிசி வழங்கும் விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து 9ம் திருவிழாவாக 21ம் தேதி காலை திருத்தேரோட்ட விழாவும், 22ம் தேதி 10ம் திருவிழாவாக தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குன்றக்குடி தேவஸ்தானம் செய்திருந்தது. நிகழ்ச்சியில் பிரான்மலை மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் முல்லைக்குத் தேர் கொடுக்கும் பாரிவிழா appeared first on Dinakaran.

Related Stories: