வீட்டுக்குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் கொடுக்கும் போது துருவிய தேங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவி கொடுத்தால் கூடுதல் சுவையும் ஆரோக்கியத்தையும் தரும்.

புத்தக பீரோவில் புகையிலை துண்டுகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

தயிர் புளிக்காமல் இருப்பதற்கு அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு வைக்கலாம். அல்லது இஞ்சியின் தோலை சீவி சிறிது தட்டி தயிரில் போட்டாலும் புளிக்காது.

காலிபிளவரில் உள்ள புழுக்களை அழிக்க சமைப்பதற்கு முன் அதனை வெண்ணீரில் சர்க்கரை கலந்து வேக வைக்கவேண்டும். இதனால் நிறமும் மாறாமல் சமைக்கலாம்.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்தால் சாம்பார் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

முட்டை தயார் செய்த பாத்திரங்களை குளிர்ந்த நீரில் ஊறப்போட்டு கழுவலாம். அல்லது காப்பி தயாரித்த பொடியை முட்டை தயாரித்த பாத்திரத்தில் சிறிது நேரம் ஊறப்போட்டு கழுவினால் முட்டை வாடை வராது.

அசைவ சாப்பாடு எளிதில் ஜீரணம் ஆக சாப்பிட்ட பின்னர் எலுமிச்சை பழச்சாறு அருந்தலாம்.

ரத்தத்தை சுத்திகரிக்கவும், புதிய ரத்தத்தை உருவாக்கவும் முருங்கைகாய் உதவுவதால் அதனை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் உடல் பருமன்  கொழுப்பு கரைக்க உதவுகிறது. மலச்சிக்கல் குறைபாடுகளையும் போக்குகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இது உதவுகிறது.

பெருங்காயத்தூளை எறும்பு புற்றில் தூவினால் எறும்பு தொல்லை நீங்கும்.

Related Stories: