ஒலிம்பிக்ஸ்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒலிம்பிக்ஸ் தீப்பந்தம் கிரீசில் உள்ள ஒலிம்பியா நகரில் சூரிய கிரணங்களால் பற்ற வைக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாட்டிற்கு எடுத்து வரப்படுகிறது. சிடியஸ், அல்டியஸ், ஃபார்டியஸ் என்னும் லத்தீன் சொற்களின் பொருளான வேகம், உயரம், வலிமை என்பது ஒலிம்பிக்கின் குறிக்கோள். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையகம்  சுவிட்சர்லாந்தில் லாஸேன் நகரில்  ஜனவே ஏரிக்கரையில் அமைந்துள்ளது.ஒரே ஒலிம்பிக்ஸில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று, ஒரு ஒலிம்பிக்கில் மிக அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்றவர் என்ற சாதனையை 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் படைத்தார்.

இவர் ஏற்கனவே ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் (2004) ஆறு தங்கப்பதக்கங்களை வென்றவர். 2012-இல் நான்கும், 2016-இல் ஐந்து தங்கப்பதக்கங்களையும் வென்றார். ஆக, இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் அதிக (23) தங்கப்பதக்கங்களைப் பெற்றவர் இவர்தான். சியோல் (1988) ஒலிம்பிக்கில் 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார் அமெரிக்கரான பென் ஜான்சன். ‘ஸ்டோனோஸொலல்’ என்ற ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இரண்டாவது இடத்தைப் பெற்ற கார்ல் லூயிஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

1900-ம் ஆண்டு ஒரே ஒருமுறை பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதில் பெல்ஜியம், ஹாலந்து, பிரிட்டன், பிரான்ஸ் அணிகள் போட்டியிடுவதாக இருந்தது. பெல்ஜியமும் ஹாலந்தும் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள பிரிட்டன், பிரான்ஸ் அணிகள் மோதின. அதில் பிரிட்டன் 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டெல்லா வால்ஷ் என்பவர் போலந்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். இவர் 1932ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றார். 1980ல் இவர் ஒரு கொள்ளை சம்பவத்தில் கொல்லப்பட்டபோது, இவர் ஒரு பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த போப் பியா மோன் ஆண்கள் நீளம் தாண்டுதலில் 1968ம் ஆண்டு மெக்ஸிகோவில் நடந்த ஒலிம்பிக்ஸில் 8.90 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இந்த சாதனையை கடந்த பெய்ஜிங் (2008) ஒலிம்பிக் வரை யாரும் முறியடிக்கவில்லை.1908ல் லண்டன் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் ஆஸ்கர் ஸ்வான் என்ற 60வயது வீரர் மூன்று பதக்கங்களை வென்றார். இவரே 1920 ஒலிம்பிக்கில் தம்முடைய 72வது வயதில்வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

Related Stories: