புதுப்பொலிவுடன் வருகிறது புதிய மாருதி வேகன் ஆர்

வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில்புதிய மாருதி வேகன் ஆர் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதிய மாருதி வேகன் ஆர் கார், 3,655 மி.மீ நீளமும், 1,620 மி.மீ அகலமும், 1,675 மி.மீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  2,435 மி.மீ வீல் பேஸ் மற்றும் 4.7 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டதாக உள்ளது.புதிய தலைமுறை மாடல் என்பதை காட்டும் விதத்தில் புதிய ஹெட்லைட், பம்பர் அமைப்பு, கிரில் அமைப்புடன் வருகிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தக்கவைக்கப்பட்டுள்ளது. புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்  ஆப்ஷனிலும் வர இருக்கிறது. LXi, VXi மற்றும் ZXi ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதில், LXi பேஸ் வேரியண்ட் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனிலும், VXi மற்றும் ZXi ஆகிய  வேரியண்ட்டுகள் 1.0 லிட்டர் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

மேலும், மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர இருக்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல்  இன்ஜின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 81 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இப்புதிய கார்,  தற்போதைய மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: