பாலியல் குற்றங்களைத் தடுக்க என்ன வழி?!

பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்கிறவர்களுக்கு செக்ஸ் வைத்துக் கொள்வதை விட, ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துவதுதான் முதன்மையான சந்தோஷமாக இருக்கும் என்கிறது உளவியல். ஏனெனில், மனரீதியிலான பாதிப்புக்கு உள்ளானவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். பாலியல் குற்றவாளிகள் பெண்ணைக் கொடுமைப்படுத்தி, அவள் துடிப்பதை பார்க்க விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில் 3 பிரிவினர் உண்டு. சந்தர்ப்பம் கிடைத்தால் வன்புணர்வில் ஈடுபடுபவர்கள், நண்பர்களுடன் கூட்டாக பாலியல் பலாத்காரத்தில் இறங்குபவர்கள், தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வன்புணர்வில் ஈடுபடுபவர்கள் என வகைப்படுத்தலாம். உளவியல் ரீதியிலும் இதற்கான காரணங்களையும் பார்க்க வேண்டும். ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் சமமாக பாவித்து பெற்றோர் நடத்த வேண்டும். பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பாலியல் கல்வியையும், பெண்களை சமமாக மதிக்கும் போக்கையும் அடிமட்டத்தில் இருக்கும் ஆண்களுக்கு சொல்லிக் கொடுப்பது அவசியம்.

பாலியல் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள்...

* ஒரு கும்பல் தவறான நோக்கத்தில் நெருங்கினால், ‘தீ’ என்றோ, ‘ஃபயர்’ என்றோ கத்த வேண்டும். தீ பரவுகிறது என்றால் யாராக இருந்தாலும் துணைக்கு ஓடி வருவார்கள்.

* முன் பின் தெரியாதவர்களின் வாகனங்களில் ஏறக்கூடாது.

* கராத்தே, களரி போன்ற தற்காப்புக் கலைகள் கற்றுக்கொள்வது அவசியம்.

* வீட்டில் தனித்திருக்கும் போது அறிமுகமில்லாதவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. வெளியே நிற்க வைத்து, பேசி அனுப்பிவிட வேண்டும்.

* ஆளரவமற்ற இடங்களில் யாராவது முகவரி விசாரித்தால் நின்று பதில் சொல்லக் கூடாது. அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவதை தவிர்க்கவும்.

* பாதுகாப்புக்காக கைப்பையில் எப்போதும் மிளகு ஸ்பிரே, பாடி ஸ்பிரே போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.

* இரவுகளில் வெளியே செல்லும்போது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் செல்ல வேண்டும்.

- சேரக்கதிர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: