விதவிதமான ரெடிமேடு மோகத்தால் தீபாவளிக்கு களை இழந்த டெய்லர் கடைகள்: சுடிதார்களில் இருந்து லெக்கின்ஸ்க்கு மாறிய மாணவிகள்

திருச்சி:மனிதர்களின் அடிப்படை தேவைகளில் முக்கியமான ஒன்றாக ஆடை அங்கம் வகிக் கின்றது. ஆடை அணிவது தேவைமட்டுமின்றி ஒருவரின் தோற்றத்தை உயர்த்தி காட்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.  அதனால்தான் ஆள்பாதி....ஆடை பாதி என்று சொல்கின்றார்கள்.... உடையை பொறுத்தவரை காலத்திற்கேற்ப ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடைகள் வடிவமைப்பில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு  வருகின்றன... தமிழகத்தில் சொந்த தொழில்களில் முதலிடத்தில் இருந்த டெய்லர் தொழில் சாதா ரண நிலையில் கூட கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. எனினும் பெண்களின் ஜாக்கெட் தயாரிப்புக்கு அதிக கிராக்கி உள்ளதால்  இந்த தொழில் எந்த காலத்திலும் மறையாது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது..

ஆண்கள் சட்டை, பேண்ட் தைப்பதற்கு வேலை அதிகம்.. ஆனால் கூலி குறைவு.. ஆனால் பெண்களின் ஜாக்கெட் தைப்பதற்கான நேரம், வேலை குறைவு.. இதில் கூலி அதிகம் கிடைக்கிறது. நேர்த்தியாக ஜாக்கெட் தயாரிக்கும்  தையல் கலைஞர்களுக்கு அதிக கிராக்கி எப்போதுமே இருந்து தான் வருகிறது... தமிழகம் முழுவதும் ரெடிமேட் ஆண்கள் துணிகளின் வரவால் சாதாரண டெய் லரிங் தொழில் சற்றே பாதிப்பை சந்தித்துள்ளது. தையல்கூலி  விலையில், புதிய சட் டைகளை வாங்கி விட முடியும் என்பதால் தையல் கலைஞர்கள் ஆண்களுக்கு சட் டை தைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் தையல் பெண் கலைஞர்கள் மட்டும் பெண்களுக்கு தைப்பதில் ஆர்வம்  காட்டி வருகின்றனர்.முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, ஒரு காலத்தில் ஆண் மற்றும் பெண் டெய்லர் கடைகளில் கூட்டம் அலை மோதக்கூடும்.

ஒரு மாதத்திற்கு முன்னதாகவே டெய் லர் கடைகளில் துணிகள் தைக்க கொடுத்தால் தான் தீபாவளிக்கு புதிய ஆடை அணிய முடியும். அந்த அளவுக்கு டெய்லர் கடைகளில் கிராக்கி இருக்க கூடும். ஆனால் தீபாவளிக்கு ஒரு  வாரம் உள்ள நிலையில், கடைகள் எல்லாம் வெறிச்சோடி காணப் படுகிறது.. இதற்கு காரணம் ரெடிமேடு மோகம் தான்.. பெண் மற்றும் ஆண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரெடிமேடுக்கு மாறி விட்டனர்..  அதுவும் பருவ பெண்கள் சொல்ல வேண்டியதில்ைல.. ஜவுளிக்கடைகளில் பெண்களுக்கு வித, வித மான சுடிதார்கள் மாடல்கள், லெக்கின்ஸ்கள், ஆண்களுக்கு விதவிதமான டீ சர்ட்டுகள், சட்டைகள், ஜீன்ஸ் பேண்டுகள் மாடல்,  மாடல்களாக இருப்பதால் அனைவரும் அதை எடுத்து விடுகின்றனர். இதனால் ரெடிமேடு கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. டெய்லர் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இது குறித்து திருச்சியை சேர்ந்த பெண் டெய்லர்கள் கூறுகையில்: ஒரு காலத்தில் கல்லுாரிக்கு செல்லக் கூடிய மாணவிகள் சுடிதார் தைத்து போட்ட காலம் மாறி, தற்போது லெக்கின்ஸ்கள் போடும் காலமாக மாறி விட்டன.  காரணம் போடுவதற்கு காம்பேக்டாக இருப்பதால் தான்... இதுதவிர மாடல், மாடல் லெக்கின்சுகள், சுடிதார்கள் அவர்களுக்கு பிடித்தமாதிரி, அவர்களுக்கு ஏற்ற மாதிரி விலையில் ரெடிமேடில் கிடைப்பதால் 90 சதவீதம் பேர் அதை  விரும்புகின்றனர்... 10 சதவீதம் பேர் துணி எடுத்து சுடிதார் தைத்து போடுகின்றனர்... இதுதவிர புடவை கட்டக் கூடிய பெண்கள் கடையில் ரெடிமேடு ஜாக்கெட் இருந்தாலும் அதை அவர்கள் விரும்புவது இல்லை. அவர்களுக்கு  விருப்பபடி ஜாக்கெட் தைக்க கடைக்கு வருகின்றனர். மற்றப்படி ஸ்கூல் யூனிபார்ம் வந்து கொண்டு இருந்தது. வீதிக்கு, வீதி, தெருவுக்கு, தெரு கடைகள் ஒரு பக்கம் பெருகி விட்டதால் அதுவும் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து  விட்டது. டெய்லர் தொழில் ஒரு பக்கம் முடங்கி இருந்தாலும், ரெகுலராக வரக்கூடிய கஸ்டமர்களை வைத்து கொஞ்சம் ஆறுதலாக பிழைப்பு நடத்த வேண் டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.

ஆண் டெய்லர்கள் கூறுகையில், பருவபெண்களை தொடர்ந்து, ஆண்களும் ரெடி மேடுக்கு முற்றிலுமாக மாறி விட்டனர்...அவர்களுக்கு ஏற்ற மாதிரி டிசைன், டிசைன் சட்டைகள், அவர்களுக்கு ஏற்ற விலையில் கிடைப்பதால்  அவர்களும் அதை விரும்பு கின்றனர்... துணிக்கு ஒரு விலை, தைப்பதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டும் என்ப தால் 90சதவீதம் பேர் ரெடிமேடு சட்டை, பேண்டுகளை விரும்புகின்றனர். 10 சதவீதம் பேர் தான் சட்டை, பேண்ட்  தைத்து போடுவதை விரும்புகின்றனர்.. ஒரு காலத்தில் ஒரு மாதம் முன்னதாகவே தீபாவளிக்கு துணி தைக்க ஆரம்பிப்போம். அதுவும் தீபாவளிக்கு முன் வரையிலும் விடிய, விடிய துணி தைத்து கொடுப்போம். தீபாவளிக்கு ஒரு  வாரம் தான் இருக்கு... கடையே ெவறிச்சோடி தான் காணப் படுகிறது.. துணி எடுத்து தைக்க கூடியவர்களுக்கு மட்டும் தைத்து கொடுக்கிறோம்..

அதுவும் ரெகுலர் கஸ்டர்மர்கள் வந்தால் தான். இல்லை என்றால் அதுவும் இல்லை... எதோ ஸ்கூல் யூனிபார்ம், போலீஸ் யூனிபார்ம் தைத்து கொடுத்து வருகிறோம்... இதனால் எங்களது பொழப்பு ஓரளவுக்கு ஓடுகிறது. இல்லை  என்றால் நிரந்தரமாக கடையை மூடிவிட வேண்டியதுதான் என்றனர்.

குறையாத பெண்களின் மோகம்....

ரெடிமேட் ஆடைகளை ஆண் மற்றும் பெண்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்திருந்தாலும், தையல் கூலி ஒரு பக்கம் உயர்ந்திருந்தாலும் இன்றும் கடைகளில் தைத்து ஆடை உடுத்தும் பெண்கள் மற்றும்  ஆண்கள் இருக்கத்தான் செய் கிறார்கள்.. அதிலும் குறிப்பாக பெண்கள் வித, விதமாக ஆடைகளை வடிவமைத்து உடுக்கின்றனர்.... ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டாலும் ஆண்களில் அனைவருக்குமே பொருந்தி  விடுவதில்லை... இதனால் துணியாக எடுத்து தைப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் போலவேதான் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலை சுற்றும் ஊசி விலை...

மிஷினில் தையல் தைப்பதற்கு முக்கியமானதே மிஷின் ஊசிதான்... ஆரம்ப காலத் தில் கடையில் 25க்கு விற்ற கம்பெனி கிங் ஊசி (ஒரு பாக்கெட்டில் 10ஊசி கொண்டது) 50க்கும், 25க்கு விற்ற கம்பெனி ஜெமி ஊசி 50க்கும்,  சாதாரணம் 15க்கு விற்ற கொக்கு ஊசி 25க்கும் விற்கப்படுகிறது. ₹5க்கு விற்ற ஜாக்கெட்டில் வைக்க கூடிய கொக்கி (ஒரு பாக்கெட்) 10க்கும், ஆண்களுக்கான சட்டை பட்டன் தரம் வாரியாக ஒரு பாக்கெட் குறைந்தது 10 வரை  விற்கப்படுகிறது.

தையல் கூலி உயர்வுக்கு காரணம்?...

மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் மிஷின் பெரிய, பெரிய கடைகளில் இருந்தாலும், ஒரு சில கடைகளில் காலில் மிதித்து தைத்து போடுவது பழக்கம் வழக்கமாக இருந்து வருவதை காணமுடிகிறது. தற்போது தையல்கூலி  விலை உயர்ந்து இருப்பது காரணம் நுால்வகை கண்டுகள், ஊசி, பட்டன், கொக்கி, ஜிப் உள்ளிட்ட தையல் தைக்க கூடிய தேவையான அனைத்து பொருட்களின் விலை 2 மடங்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.பெண்களுக்கு  ஆரம்பகாலத்தில் 200கூலி வாங்கிய லைனிங் சுடிதாருக்கு தற் போது 300, 150கூலி வாங்கிய சுடிதாருக்கு 250, 120 கூலி வாங்கிய லைனிங் ப்ளவுஸ் 170, 60 கூலி வாங்கிய ப்ளவுஸ் 80, 200 வாங்கிய மாடலிங் ப்ளவுஸ்  300வரையிலும் கூலி உயர்ந்துள்ளது. இதே போல் ஆண்களுக்கு ஆரம்ப காலத்தில் 250கூலி வாங்கிய பேண்டுக்கு 300ம், 170கூலி வாங்கிய சட்டையில் புல் கை க்கு 220ம், 160கூலி வாங்கிய ஆப் கைக்கு 200ம் கூலி  உயர்ந்துள்ளது.

நம்பர் ஒன் அமிட்டோ நுால்கண்டு...

நூல்கண்டு வகைகளில் 10க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதில் தரமான நுால் கண்டு நம்பர் அமிட்ேடாவாகும். ஆரம்ப காலத்தில் 5க்கு விற்ற அமிட்டோ ஒரு நுால்கண்டு 10க்கு கடையில் விற்கப்படுகிறது. இதே போல்  3க்கு விற்ற மெஹி ரோ கோட்ஸ் 5க்கும், 3க்கு விற்ற வர்மான் ₹5க்கும், ₹3க்கு விற்ற ஹமல்பாலி 5க்கும், 3க்கு விற்ற ஸ்பேட் 5க்கும் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது... நம்பல் ஒன் அமிட்டோ நுால்கண்டு விலை அதிகமாக  இருப்பதால் தையல் கலைஞர்களுக்கு கட்டுப்படியாகாது என்பதால் பெரும்பாலானோர் சாதாரண நுால்கண்டை வாங்கி தைக்கின்றனர்...

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: