நாட்டுக்கோழி

இஞ்சி வறுவல்எப்பவுமே இயற்கையான முறையில் வளரும் காய்கறிகள், நாட்டுக்கோழி, ஆடு, மீன் போன்றவைகளை உண்பதால் எந்தவித சிக்கலும் இல்லை.  நாட்டுக்கோழி சூடு என பலர் ஒதுக்குவது உண்டு. சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் நல்லது.

செய்முறை

நாட்டுக்கோழிக்கறியை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழியவும். இஞ்சியை தோல் நீக்கி சாறு பிழிந்து அதில் மஞ்சள் தூள், உப்பு, வினிகர்,  மிளகாய்த்தூள் போட்டு கலக்கவும். இத்துடன் கோழிக்கறியை போட்டு நன்றாக பிசையவும். இத்துடன் கரம் மசாலாத்தூளை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற  விடவும். வாணலியில் 150 கிராம் அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் ஊறிய கோழியை கொட்டி வதக்கவும். கறி பொன்னிறமாக வந்ததும் கறிவேப்பிலை,  மல்லித்தழையை சேர்த்து இறக்கவும்.

இஞ்சி சேர்த்து செய்த வறுவல் என்பதால், மிகவும் சுவையாக இருக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: