வேலூர் மாநகராட்சி 4 நாட்களில் ₹2.15 கோடி சொத்து வரி வசூல் கடைசி இடத்தில் கடலூர் தமிழ்நாட்டில் 15வது இடத்திற்கு முன்னேறியது

வேலூர், ஜூன் 17: தமிழ்நாட்டில் வேலூர் மாநகராட்சியில் நடப்பாண்டில் 4 நாட்களில் ₹2.15 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. வரி வசூலில் 15 இடத்திற்கு வேலூர் மாநகராட்சி முன்னேறியுள்ளது. கடைசி இடத்தில் கடலூர் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, கோவை உட்பட 20 மாநகராட்சிகளில் மட்டும் வீடு, இடம், கடை உள்ளிட்டவற்றிற்கான சொத்து வரி 30 லட்சம் இனங்களுக்கு சொத்துவரி வசூலிக்கப்பட வேண்டும். இதில் நடப்பாண்டில் சொத்து வரி வசூல் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் சொத்து வரி வசூலில் தாம்பரம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் திருச்சியும், 3வது இடத்தில் ஆவடியும், 4 வது இடத்தில் காஞ்சிபுரமும், 5 வது இடத்தில் சேலம், 6 வது இடத்தில் கோவை, 7வது இடத்தில் தூத்துக்குடி, 8வது இடத்தில் தூத்துக்குடி, 9வது இடத்தில் ஒசூர், 10 வது இடத்தில் மதுரை, 11வது இடத்தில் திருப்பூர், 12வது இடத்தில் கரூர், 13வது இடத்தில் நாகர்கோயில், 14வது இடத்தில் திண்டுக்கல், 15 வது இடத்தில் வேலூர் உள்ளது. தொடர் சிவகாசி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கும்பகோணம் மற்றும் கடைசி இடத்தில் கடலூர் மாநகராட்சி உள்ளது. வேலூர் மாநகராட்சியில் கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின்பேரில் 4 மண்லங்களிலும் சொத்து வரி தீவிரமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 4 நாட்களில் ₹2.15 கோடி வரையில் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாநகராட்சி சொத்து வரி வசூலில் 19 வது இடத்தில் இருந்தது. தற்போது 15 இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் வரி பாக்கி வைத்துள்ள கடைகள், வீடு உள்ளிட்டவற்றிற்கான வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் மாநகராட்சி 4 நாட்களில் ₹2.15 கோடி சொத்து வரி வசூல் கடைசி இடத்தில் கடலூர் தமிழ்நாட்டில் 15வது இடத்திற்கு முன்னேறியது appeared first on Dinakaran.

Related Stories: