உரிய நேரத்தில் மீட்காததால் அடிபட்ட நாய் உயிரிழப்பு: புளூ கிராஸ் மீது கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போரூர் சபரி நகரை சேர்ந்த அழகர் செந்தில் என்ற சமூக ஆர்வலர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை போரூர் ரவுண்டனா அருகே கடந்த 12ம் தேதி நாய் ஒன்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்தது. இதுகுறித்து புளூ கிராசுக்கு தகவல் அளித்தோம். ஆனால் புளூகிராஸ் சார்பில் யாரும் நாயை மீட்க வரவில்லை. இதையடுத்து விபத்தில் சிக்கிய நாயை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் நாய் உயிரிழந்தது.

யாரேனும் மிருகங்களை வதைத்தால் முதலில் புளூகிராஸ் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைக்கின்றனர். எனவே நாயின் உயிரிழப்புக்கு காரணமாக புளூ கிராஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் புகாரின்படி இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே நாய் உயிரிழப்புக்கு காரணமாக புளூ கிராஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: